பண்ருட்டி அருகே மின்னல் தாக்கி அக்கா-தம்பி பரிதாப பலி

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மணப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம்(40). பிளாஸ்டிக் குடம் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ருக்கு (35). இவர்களுக்கு நிஷா(11) கவியரசன்(10), தீனா(8) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். நிஷா 7ம் வகுப்பும், கவியரசன் 6ம் வகுப்பும் படித்து வந்தனர். இவரது வீட்டில் பசுமாடு ஒன்று உள்ளது.  நேற்று மாலை சற்று தொலைவில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை நிஷாவும், கவியரசனும் அழைத்துகொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் இருவரும் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

Related Stories:

>