ஆலந்தூர்: பள்ளிக்கரணை, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், (37) காய்கறி வியாபாரி. ஆலந்தூர் மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் தனசேகர் (40) இவரது மகன் அருண்குமார், (19) கல்லூரி மாணவர். இருவரும் மடிப்பாக்கம், ராம்நகர், மெயின்ரோட்டில் பைக்கில் வந்தபோது, பள்ளிக்கரணை பெரியார் நகரைச்சேர்ந்த மோகன்ராஜ் மீது, பைக் மோதியுள்ளது .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது இதனை மோகன்ராஜ் தட்டிக்கேட்டபோது அருண்குமார் அருகில் இருந்த கல்லை எடுத்து மோகன்ராஜின் தலையில் அடித்ததில் ரத்தம் வழிந்தது.