×

சாத்தான்குளம் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய காவலர்கள் மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய காவலர்கள் மனு ஒத்திவைக்கப்பட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகள்ன ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய  தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.  சந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நசிமா பானு முன்பு  இன்று நடைபெற்றது. அப்போது, அவருக்கு ஜாமின் வழங்க சிபிஐ வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு  தெரிவித்தார். சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாலும் முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய சி.பி.ஐ. தரப்பு வாதம் செய்தது.  மேலும், இந்த வழக்கு தொடர்பான 9 காவலர்களுக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்கவும், 2 பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Sathankulam , Sathankulam, murder case
× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில்...