இந்தியா-டென்மார்க் இடையேயான உச்சி மாநாடு இன்று தொடக்கம்: பிரதமர் மோடி-டென்மார்க் பிரதமர் மெட் காணொலி காட்சி மூலம் பங்கேற்பு.!!!

டெல்லி: இந்தியா-டென்மார்க் இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெறவுள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சென் பங்கேற்று பேசுகின்றனர். இது  தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆராய்வு செய்ய இந்த மாநாடு இரு தலைவர்களுக்கும் கிடைத்துள்ள அருமையான வாய்ப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரஸ்பரம்,  நலன்பயக்கும் துறைகளில் இருநாடுகளும் கூட்டாக செயல்படுவது தொடர்பாக விவாதிக்கவுள்ள தலைவர்கள், ஏற்கனவே உள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் உரையாடவுள்ளனர்.

இந்தியா-டென்மார்க் இடையே 400 ஆண்டு கால வரலாற்று சிறப்பு மிக்க இணைப்புகள் இருந்தபோதிலும், அதிகாரப்பூர்வமாக தூதரங்கள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவின் வெண்மை புரட்சியிலும், காற்றலை மின்உற்பத்தியிலும்  இந்தியாவின் முக்கிய பங்குதாரராக டென்மார்க் உள்ளது. இந்தியாவை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் டென்மார்க் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட இந்திய தகவல்  தொழில்நுட்ப நிறுவனங்கள் டென்மார்க்கில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

இதனால், டென்மார்க்கின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறைகளில் இந்திய நிபுணர்கள் கணிசமான பங்களிப்பை ஆற்றி வருகிறார்கள். டென்மார்க்கை சேர்ந்த நிறுவனங்களுக்கான இந்தியாவில் இருந்து 30,000-க்கும் மேற்பட்ட தகவல்  தொழில்நுட்ப ஊழியர்கள், சமிபத்திய தகவல் தொடர்பு சாதனங்களையும், மென்பொருட்களையும் அந்நாட்டிற்காக தயாரித்து வழங்குகிறார்கள். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும், காற்றாலை மின்சாரத்திற்கான  சாதனங்களை ஏற்றுமதி செய்யவும் இந்தியாவும், டென்மார்க்கும் செயல்பட்டு வருகின்றனர்.

Related Stories: