×

இஸ்ரோ மையம் அருகே அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு : தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் நேரில் சென்று சோதனை!!!

நெல்லை:  நெல்லை மாவட்டம் காவல்கிணறில் இஸ்ரோ மையம் அருகே அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணற்றில் இஸ்ரோ மையம் அமைந்துள்ளது. இதையடுத்து காவல்கிணறு பேருந்து நிலையத்தையொட்டி கட்டிமுடிக்கப்பட்டு செயல்படாமல் தமிழக அரசின் வேளாண்மை துறையின் மலர் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு நேற்றைய தினம் அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. அதாவது மாலை 6 மணியளவில் மர்ம நபர்கள் இந்த சதி வேலையை அரங்கேற்றியுள்ளனர். எனினும் பூ மார்க்கெட்டில் ஆட்கள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அந்த இடம் இஸ்ரோ மையத்திற்கு மிகவும் அருகில் இருப்பதால் இஸ்ரோ தொழில் பாதுகாப்பு படையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். வள்ளியூர் ஏ.எஸ்.பி. சாய்சிங் மீனா, நாகர்கோவில் டி.எஸ்.பி. வேணுகோபால் ஆகியோரும் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அருகிலுள்ள மக்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறியுள்ளனர். பின்னர், வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாக கூறியுள்ளனர். தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு சோதனை மேற்கொண்டனர். பூ மார்க்கெட் அருகே உள்ள சோதனைச்சாவடி மற்றும் கட்டடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் பதிந்துள்ளதா? என்று காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இவை பொதுமக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : center ,ISRO , Chief Minister Palanisamy, Deputy Chief Minister, Panneer Selvam, Ministers, separately, meeting...
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்