×

கேரள காங். (எம்) தலைவர் மரணம்

திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் சி.எப். தாமஸ் (81). இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவர், கடந்த 1980 முதல் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரி தொகுதியில் தொடர்ந்து எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். கேரள காங்கிரஸ் (எம்) கட்சி தலைவர் கே.எம்.மாணியின் நெருங்கிய நண்பர் என்றாலும், அவர் இறந்த பிறகு கேரள காங்கிரசின் பி.ஜே.ஜோசப் பிரிவை இவர் தேர்வு செய்தார். தாமஸ் முந்தைய யுடிஎப் அரசில் பத்திரப்பதிவு, ஊரக வளர்ச்சி, காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆகிய துறைகளில் அமைச்சராக பதவி வகித்தார். இவர் 1956ல் இந்திய தேசிய காங்கிரசில் நுழைந்தார். மாணவராக இருந்தபோதே அரசியலில் ஈடுபாடு கொண்டவர். அதற்கு முன், பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். அவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

Tags : Kerala Cong ,Death , Kerala Cong. (M) Death of the leader
× RELATED ஆத்மாவை கடவுள் ஆசீர்வதிப்பார்: காங்....