பைக்கில் விரட்டி கிண்டல் செய்ததால் மொபட்டில் இருந்து விழுந்து யோகா ஆசிரியை படுகாயம்: கார் டிரைவர் கைது

அண்ணாநகர்: அண்ணாநகரை சேர்ந்தவர் சுமதி (32). (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) தனியார் பள்ளியில் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 23ம் தேதி நெல்சன் மாணிக்கம் சாலையில் மொபட்டில் சென்றபோது, பைக்கில் வந்த ஒரு வாலிபர், சுமதியை கிண்டல் செய்துள்ளார். இதனால், பயந்துபோன சுமதி மொபட்டை வேகமாக ஓட்டினார். அந்த வாலிபரும் கேலி, கிண்டல் செய்தபடி பின் தொடர்ந்துள்ளார். இதனால், சுமதி கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, அரும்பாக்கம் ராணி அண்ணாநகரை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் (39) என தெரியவந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

Related Stories:

>