×

கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரயில்கள் சோதனை ஓட்டம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோயில் இடையே நாளை ரயில்கள் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் தண்டவாளம் அருகே பொதுமக்கள் நடக்கவோ அல்லது பாதையை கடக்கவோ வேண்டாம் சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் - செங்கல்பட்டு 3வது ரயில் பாதையின் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3வது புதிய ரயில்வே வழித்தட பணிகள் முடிவுற்ற நிலையில் அதற்கான சோதனை ஓட்டம் நாளை நடைபெறவுள்ளது.

கூடுவாஞ்சேரி மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையேயான 11 கி.மீ தூரத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை பெங்களூருவில் உள்ள தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை (29ம் தேதி) ஆய்வு நடத்தவுள்ளார். இந்த சோதனை ஓட்டம் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளது. எனவே கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் ரயில் பாதையை கடக்கவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Guduvancheri - Singapperumal ,public , Guduvancheri - Singapperumal temple trains run on a warning to the public
× RELATED வெள்ள அபாய எச்சரிக்கை