×

வாலிபர் சடலம் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 25ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தாமரை குளம் அருகே பார்த்தபோது விக்னேஷின் இரு சக்கர வாகனம் மற்றும் அவரது செருப்பு அங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர்கள் வந்து குளத்தில் தேடிப்பார்த்தபோது விக்னேஷின் உடல் தாமரை குளத்தில் மிதந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Youth corpse recovery
× RELATED வாலிபர் சடலம் மீட்பு