×

மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு

பொன்னேரி: பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் சுரேன்(14). அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் காற்றாடி விட்டுக் கொண்டிருந்தான். அப்போது, மின்சார கம்பியில் காற்றாடி சிக்கியது. பின்னர் காற்றாடியை ஒரு ஈரமான கொம்பால் எடுக்க முயன்றான். அப்போது, மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதனை கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சிறுவனை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Boy dies after being electrocuted
× RELATED சென்னை அடுத்த திருநின்றவூரில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு