×

பூந்தமல்லி - அன்னம்பேடு இடையே ஒன்றரை ஆண்டுக்கு முன் நிறுத்திய மாநகர பேருந்தை இயக்க வேண்டும்: போக்குவரத்து கிளை மேலாளரிடம் மனு

ஆவடி: ஆவடி அடுத்த பூந்தமல்லி - அன்னம்பேடு இடையே ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்ட மாநகர பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கருணாகரச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி கைலாசம் பூந்தமல்லி பணிமனை மாநகர போக்குவரத்து கிளை மேலாளரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் விவரம்: பூந்தமல்லியிலிருந்து பாரிவாக்கம், அணைக்கட்டுச்சேரி, தண்டுரை, கருணாகரச்சேரி வழியாக அன்னம்பேடு கிராமத்திற்கு மாநகர பேருந்து (தடம் எண். 54சி) பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்தை பூந்தமல்லி - அன்னம்பேடு இடையே உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்திவந்தனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு கருணாகரச்சேரியில் நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணிக்காக மாநகர பேருந்து நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, பணிகள் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் மீண்டும் மாநகர பேருந்து இயக்கவில்லை. இதனால் மேற்கண்ட பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்களது கிராமங்களை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தான் தங்களது ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு அதிகளவில் பயணச்செலவு ஏற்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை மாநகர அதிகாரிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுககவில்லை. எனவே, இனிமேலாவது பூந்தமல்லி - அன்னம்பேடு இடையே நிறுத்தப்பட்ட மாநகர பேருந்தை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags : Transport Branch Manager ,Poonamallee - Annampedu , City bus stopped between Poonamallee and Annampedu a year and a half ago: Petition to Transport Branch Manager
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...