×
Saravana Stores

அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்தால் பருப்பு வகைகள் ‘கிடுகிடு’ உயர்வு: மூட்டைக்கு ரூ.1,500 வரை விலை அதிகரிப்பு

விருதுநகர்: மத்திய அரசின் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்தால், பருப்பு வகைகள் மூட்டைக்கு ரூ.1,500 வரை விலை உயர்ந்துள்ளது. மலேசியாவில் பாமாயில் விலை குறைவால் டின்னுக்கு ரூ.40 குறைந்துள்ளது. மத்திய அரசின் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்தில், வணிகர்கள் இருப்பு வைக்க கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இதனால், பயறு, பருப்பு விலை விறுவிறுவென உயர்ந்துள்ளது. உளுந்தம்பருப்பு (100 கிலோ) மூட்டைக்கு ரூ.1,300, துவரம்பருப்பு மூட்டைக்கு ரூ.1,500, கடலைப்பருப்பு மூட்டைக்கு ரூ.1,000, பொரிகடலை (55 கிலோ) மூட்டைக்கு ரூ.300 என விலை உயர்ந்துள்ளது. இதன்படி, கடந்த வாரம் ரூ.8,300க்கு விற்ற ஆந்திரா உளுந்து இந்த வாரம் ரூ.8,800க்கு விற்பனையானது.

இதேபோல, ரூ.7,800க்கு விற்ற பர்மா உளுந்து ரூ.8,800, ரூ.10,700க்கு விற்ற உருட்டு உளுந்தம்பருப்பு லைன் ரூ.12,000, ரூ.10,200க்கு விற்ற உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா ரூ.10,800, ரூ.9,100க்கு விற்ற தொளி உளுந்தம்பருப்பு ரூ.10,100, ரூ.6,500க்கு விற்ற துவரை ரூ.8,000, ரூ.10,000க்கு விற்ற துவரம்பருப்பு ரூ.11,500, ரூ.9,500க்கு விற்ற துவரம்பருப்பு உடைசல் ரூ.11,000, ரூ.7,000க்கு விற்ற 100 கிலோ கடலைப்பருப்பு மூட்டை ரூ.8,000, ரூ.4,125க்கு விற்ற 55 கிலோ பொரிகடலை மூட்டை ரூ.4,400க்கும் விற்பனையானது.

பாமாயில் விலை குறைவு: மலேசியாவில் கடந்த 2 மாதமாக விலை உயர்ந்த பாமாயில், நடப்பு வாரத்தில் குறைந்தது. இதனால் ரூ.1,460க்கு விற்ற பாமாயில் (15 கிலோ) டின் ரூ.40 குறைந்து ரூ.1,420க்கு விற்றது. பாமாயில் விலை சரிவால் கடலை எண்ணெய் டின் ரூ.20 குறைந்து ரூ.2,380க்கு விற்பனையானது. எள் வரத்து காரணமாக நல்லெண்ணெய் டின்னுக்கு ரூ.155 குறைந்து ரூ.4,043க்கு விற்பனையானது. விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்: நிலக்கடலை பருப்பு (80 கிலோ) மூட்டை - ரூ.5,900, எள் பிண்ணாக்கு  - ரூ.1,700.  பட்டாணி பருப்பு கனடா  - ரூ.7,300, பட்டாணி வெள்ளை  - ரூ.8,000. மல்லி (40 கிலோ) லைன்  - ரூ.3,100, நாடு  - ரூ.3,400.

மளிகை பொருட்கள் மொத்த விலை கிலோவில்:  மஞ்சள் தூள் -  ரூ.130, வெந்தயம்  - ரூ.85 (75), கடுகு  - ரூ.75 (70), சீரகம்  - ரூ.220,  சோம்பு  - ரூ.135, மிளகு  - ரூ.420, புளி  - ரூ.160, வெள்ளை பூண்டு  - ரூ.220, மண்டை  வெல்லம்  - ரூ.58, சுண்டல் (கருப்பு)  - ரூ.60, வெள்ளை  - ரூ.80, தட்டாம்பயறு  -  ரூ.60  என விற்பனையானது. குண்டூர் ஏசி வத்தல் குவிண்டாலுக்கு ரூ.13,500 முதல் ரூ.15,000, முண்டு வத்தல் ஏசி ரூ.10,000 முதல் ரூ.13,000, முண்டு வத்தல் ரூ.8,000 முதல் ரூ.9,000, நாடு வத்தல் ரூ.6,000 முதல் ரூ.7,000, கடலை புண்ணாக்கு (100 கிலோ) ரூ.4,600, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா பாசிப்பயறு (புதுசு) ரூ.8,000, ஆந்திரா பயறு ரூ.7,500, பாசிப்பருப்பு ரூ.10,800, பாசிப்பருப்பு ஆந்திரா ரூ.10,200 என விற்பனையானது.


Tags : Kidukidu , Essential commodities law amends pulses to rise sharply: Rs 1,500 per bag
× RELATED வரலட்சுமி நோன்பை முன்னிட்டு பூக்கள்...