×

சென்னையை குறிவைக்கும் ஐரோப்பிய கும்பல்!!...விருந்துகளில் அதிகரிக்கும் போதை மருந்து!..தபால் நிலையங்கள் மூலம் அரங்கேறும் கடத்தல்!!!

சென்னை;  ஐரோப்பிய நாடுகளில் தயாராகும் செயற்கை போதை மருந்துகள் அதிகளவில் வந்தடையும் இடமாக சென்னை மாறி வருகிறது. வெளிநாட்டு தபால் நிலையங்களை பயன்படுத்தி கடத்தல் கும்பல் கைவரிசை காட்டுவதால் மத்திய புலனாய்வு அமைப்புகள் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கஞ்சா, கொக்கைன் போன்ற போதை ரகங்களின் மூலப்பொருள் தாவரங்களாகும். அதற்கு மாறாக ரசாயனங்களை பயன்படுத்தி ஆய்வகங்களில் தயாரிக்கப்படுவதே செயற்கை போதை மருந்து. கடந்த 10 ஆண்டுகளில் இந்த பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டது. 1000க்கும் மேற்பட்ட செயற்கை போதை மருந்துகள் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம்.

அதனை பயன்படுத்துவோர் மத்தியில் எபிட்ரினில் எக்ஸ்டாசி மற்றும் ஐஸ் போதை பொருள் ரகங்கள் பிரபலமாக உள்ளது. அதன் மூலப்பொருள் எபிட்ரின் ஆகும். 2 கிலோ எபிட்ரின் மூலம் 1 கிலோ எக்ஸ்டாசியும், 10 கிலோ எபிட்ரினிலிருந்து 1 கிலோ ஐஸ் போதை மருந்தும் தயாரிக்கப்படுவதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா மற்றும் சீனாவில் இந்த தயாரிப்பு அதிகம் என முன்பு கூறப்பட்டது. இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிய நிலை மாறி, தற்போது ஜெர்மனி, நெதர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் போதை மருந்துகள் அதிகளவில் ஊடுருவுகின்றன. கொரோனா காலத்தில் நிகழ்ந்த இந்த தலைகீழ் மாற்றம் புலனாய்வு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதற்கிடையில் வெளிநாட்டு தபால் நிலையங்கள் மூலம் பார்சல் வடிவில் சென்னை, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செயற்கை போதைமருந்துகள் வருவதை மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. அதன்பேரில் மத்திய புலனாய்வு பிரிவு, போதைப்பொருள் தேசிய புலனாய்வு பிரிவு, மற்றும் சுங்கத்துறை உஷார்படுத்தப்பட்டு சோதனைகள் தீவிரமடைந்துள்ளன. நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கும் விருந்துகளில் புகைத்தல், தெளித்தல், உள்ளிழுத்தல் வடிவிலும் மற்றும் தேநீர்,மதுபானம் உள்ளிட்டவற்றில் கலந்தும் செயற்கைப் போதை மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. மும்பை, பெங்களூரு, கொச்சியில் நடிகை, நடிகர்கள் கைதாகி வருவது இதன் பின்னணியே.

Tags : gang ,European ,Chennai ,parties , European gang targeting Chennai !! ... Drugs on the rise at parties!
× RELATED சில்லிபாயின்ட்..