×

கலெக்டரின் பெயரை மாற்றி சொன்ன அமைச்சர்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றியம், சீலப்பாடியில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், நேற்று மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, 12 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் கடனுதவி வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு சலுகைகள், நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் குழுக்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடனுதவி வழங்குகிறோம்’’ என்றார். தொடர்ந்து அமைச்சர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி என்பதற்கு பதிலாக மாவட்ட  கலெக்டர் ஜெயலட்சுமி ஐஏஎஸ் என கூறினார்.
அமைச்சர், கலெக்டரின் பெயரை மாற்றி கூறியது அருகிலிருந்த கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் மகளிர் குழு பெண்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.Tags : collector , The minister who changed the name of the collector
× RELATED காசை பார்த்தா சம்பாதிச்ச பெயர் பாழாயிடும்!