×

கால்நடை மருத்துவ படிப்பில் சேர இதுவரை 12,889 பேர் விண்ணப்பம்

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில் சேர இதுவரை 12,889 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் கடந்த 24ம் தேதி முதல் 28ம் தேதி மாலை 6 மணி வரை வரவேற்கப்பட்டன.  இதில் 22ம் தேதி வரை 12,889 பேர் விண்ணப்பித்துள்ளனர். கால்நடை மருத்துவ பட்டப்படிப்பிற்கு 10,507 பேரும், பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு 2382 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 9ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான இடங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் 23ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Tags : So far 12,889 people have applied to join the veterinary course
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...