×

லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை

சென்னை: அம்பத்தூர் பகுதியில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு உயர் மின் அழுத்த இணைப்பை புதுப்பிக்க அம்பத்தூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் சுப்பையா விண்ணப்பித்தார். அதற்கு அம்பத்தூர்  கோட்ட மின் வாரிய ஆய்வாளர் தேனப்பன் ₹10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு, சுப்பையா நாளை வந்து தருவதாக  கூறிவிட்டு சென்றுள்ளார். சுப்பையா, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி சுப்பையா ₹10 ஆயிரத்தை எடுத்து கொண்டு, மின்வாரிய ஆய்வாளர் தேனப்பனிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த  வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் தந்தையிடம்  ரூ.12 லட்சம் திருடிய சிறுவன் இந்த  வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி தேனப்பனுக்கு 4 ஆண்டு சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்….

The post லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ambathur district ,Subbiah ,Ambattur ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...