×

300 டன் கிளாத்தி மீன்கள் சிக்கியது: பாம்பன் மீனவர்கள் பரவசம்

ராமேஸ்வரம்:  பாம்பன் மீனவர்களின் படகில் 300 டன் கிளாத்தி மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மன்னார் வளைகுடா கடலில் காற்றின் வேகம் தணிந்ததால் நேற்று முன்தினம் பாம்பன் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர். நான்கு நாட்களுக்கு மேலாக பலத்த காற்றுடன் கடல் சீற்றத்துடன் இருந்ததால் மீன்பாடு அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பாக்கப்பட்டது. அன்று இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு நேற்று காலை பாம்பன் தெற்குவாடி கடற்கரைக்கு மீனவர்கள் திரும்பினர்.

விசைப்படகுகளில் 2 டன் முதல் 4 டன் வரை கிளாத்தி மீன்கள் பிடிபட்டு இருந்தன. இவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். கிளாத்தி மீன்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் அதிகபட்சமாக 300 டன்னுக்கு மேல் கிளாத்தி மீன்கள் கரை வந்து சேர்ந்ததால் மீன்களை இறக்குவது, விற்பனை செய்வது என பாம்பன் தெற்குவாடி கடற்கரையே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : fishermen ,Pamban , 300 tons of clam fish caught: Pamban fishermen ecstatic
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...