×

சர்வதீர்த்த குளக்கரை பகுதியில் நீத்தார் வழிபாடு மண்டப அடிக்கல் நாட்டு விழா: நகராட்சி அதிகாரிகளிடம் எம்எல்ஏ சரமாரி கேள்வி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சி சர்வதீர்த்த குளக்கரை பகுதியில், நீத்தார் வழிபாடு மண்டபம் கால்கோள் நிழச்சி நடந்தது. இதில், கலந்து கொண்ட  எம்எல்ஏ எழிலரசன், அப்பகுதியை முறையாக பராமரிக்காத அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். காஞ்சிபுரம் பெரு நகராட்சி 3வது வார்டு, சர்வதீர்த்த குளக்கரை உள்ளது. இங்கு, பல ஆண்டுகளாக நீத்தார் வழிபாடு மண்டபம் இல்லாமல் இருந்தது.  இதனால், பொதுமக்களின் தேவைக்காக, நீத்தார் வழிபாடு மண்டபம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்பேரில், காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், தொகுதி மேம்பாட்டு நிதி 2019ன் கீழ் ₹5 லட்சம் ஒதுக்கீடு செய்து, நீத்தார் வழிபாடு  மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

இதைதொடர்ந்து, நீத்தார் மண்டபத்துக்கான கால்கோள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் தலைமை தாங்கி, அடிக்கல்  நாட்டினார். இதில், நகர அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர் கருணாநிதி, பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட கவுண்சிலர் எம்.எஸ்.சுகுமார்,  மாவட்ட பிரதிநிதி குமரேசன், மாணவர் அணி அமைப்பாளர் அபுசாலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, நீத்தார் மண்பத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு எம்எல்ஏ எழிலரசன் சென்றார். அப்போது, அப்பகுதி முழுவதும் குப்பையாக  காட்சியளித்தது. அங்கு, நகராட்சி துப்புரவு பணியாளர்கள், எவ்வித பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்ததை கண்டு அதிருப்தியடைந்தார்.
பின்னர், விழாவுக்கு வந்த நகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதியிடம், எம்எல்ஏ கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இடத்தையே  சுத்தம்செய்யாததபோது,  நகரை எப்படி சுத்தப்படுத்தி பொதுமக்களை காப்பாற்றுவீர்கள். சுகாதாரம் இல்லாத காஞ்சியில் கோவிட் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறி பெருமைப்படும்  உங்களுக்கு இதுபற்றி தெரியவில்லையா என பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.



Tags : ceremony ,area ,Sarvatirtha Kulakkara ,Neethar Worship Hall ,MLA , In the universal pool area Neethar Worship Hall Groundbreaking Ceremony: MLA Volley Question to Municipal Officials
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா