×

மருத்துவ முகாம்

ஊத்துக்கோட்டை: பூண்டி ஊராட்சியில் கச்சூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து  துறை மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ் தலைமை  தாங்கினார்.மாவட்ட நல கல்வியாளர் கணேசன், மாவட்ட தொழில் நுட்ப உதவியாளர் ராஜேந்திரன், டாக்டர் ஜெயஸ்ரீ, ஒன்றிய கவுன்சிலர் விஜய், முன்னாள்  ஊராட்சி தலைவர் பிரசாத், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், ஜெயசூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்தார். இம்முகாமில், டாக்டர்  பாலமணிகண்டன் தலைமையில் 16 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சிறுவர்-சிறுமிகளுக்கு  ரத்த சோகை பரிசோதனை செய்தனர். மேலும், பிரதமரின் பிட் இந்தியா இயக்கத்தின் சார்பில் ரத்த சோகை குறித்தும், கொரோனா குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.     Tags : camp , medical camp
× RELATED விழிப்புணர்வு முகாம்