கவாஸ்கர் மீது அனுஷ்கா கோபம்

ஊரடங்கு நேரத்தில் தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு பந்து வீசி கிரிக்கெட் விளையாடும் போன்ற வீடியோவை மே மாதம் விராத் கோஹ்லி சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இந்நிலையில் ேநற்று முன்தினம் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் கேப்டன் விராத் கோஹ்லியின் பேட்டிங், பீல்டிங் இரண்டும் படு சொதப்பலாக இருந்தது. போட்டியின் வர்ணனையாளராக இருந்த சுனில் காவஸ்கர்,  கோஹ்லியை வீடியோவையும், சொதப்பல் ஆட்டத்தையும்  தொடர்பு படுத்தி கிண்டல் அடித்தார். அதனால் கோபமான அனுஷ்கா சர்மா, ‘மிஸ்டர் கவாஸ்கர் உங்கள் வார்த்தைகள் மட்டமானது.

கணவர் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரது மனைவியை எப்படி குற்றம்சாட்டி விமர்சனம் செய்யலாம்? கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையும், விளையாட்டையும் விமர்சிக்கும் போது  எங்களுக்கும் மரியாதை தர வேண்டும் என்று நினைக்கவில்லையா?. விளையாட்டை விமர்சிக்கும் போது என் பெயரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன.  மிஸ்டர் கவாஸ்கர் நீங்கள் ஒரு ஜென்டில்மேன். விளையாட்டில் சாதனைகளை புரிந்து உள்ளீர்கள். ஆனால் நீங்கள் சொன்னதை கேட்ட பிறகு, நான் உணர்ந்ததை சொல்ல விரும்பினேன்’ என்ற ரீதியில் பொரிந்து தள்ளியுள்ளார்.

Related Stories:

>