×

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு சட்டம் குறித்து அனைத்து காவல்நிலையங்களிலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், சமூக பாதுகாப்பு இயக்குநர் லால்வீனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  விழிப்புணர்வு பதாகையை நீதிபதி பிரகாஷ் திறந்து வைத்தார். மண்டலம் வாரியாக காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு அடையாள வில்லைகளை நீதிபதி  பிரகாஷ் அணிவித்தார்.


Tags : police officers ,crimes , Training for newly appointed police officers to prevent crimes against children
× RELATED போலீசுக்கு யோகா பயிற்சி