கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை: டெல்லி அரசு தகவல்..!!

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மனிஷ் சிசோடியா, கடந்த 14ம் தேதி கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் வீட்டில் தன்னை  தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்படி, துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவும் வீட்டுத்தனிமையில் இருந்து தேவையான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டார்.

மேலும், இருப்பினும், இந்நிலையில், நேற்று காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, மனிஷ்  சிசோடியா உடனடியாக டெல்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் இருந்து சாகேத்தின் மேக்ஸ் மருத்துவமனைக்கு  நேற்று மாற்றப்பட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், அடுத்தகட்ட சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பது உறுதியாகி உள்ளது.  மருத்துவர்கள் மனிஷ்  சிசோடியாவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>