×

தெலுங்கானாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் பெண்ணின் குடும்பத்தினரால் ஆணவக் கொலை

ஹைதராபாத்: தெலுங்கானாவில் புதிதாக காதல் திருமணம் செய்த இளைஞர் பெண்ணின் குடும்பத்தினரால் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் சந்தனகரில் இளைஞர் ஹேமந்த் குமார், அவந்தி ரெட்டி தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இருவருமே பட்டதாரிகள். அவந்தி ரெட்டியின் குடும்பம் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவந்தி ரெட்டியின் குடும்பத்தினர் தம்பதிகளிடம் சமாதானம் பேசுவதுபோல் பேசி இருவரையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே காரிலிருந்து கீழே இறக்கி ஹேமந்த் குமாரை அடித்து உதைத்துள்ளனர். கணவர் தன் கண் முன்னே அடித்து உதைக்கப்படுவதைப் பார்த்த, அவந்தி ரெட்டி காவல்துறைக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார்.

ஆனாலும் ஹேமந்த் குமாரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. ஹேமந்த் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் அவந்தியின் மாமா யுகந்தர் ரெட்டி கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். காவல்துறை நான் தகவல் கொடுத்த உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் எனது கணவர் உயிரோடு இருந்திருப்பார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவந்தி ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Telangana , Telangana, love, marriage, murder
× RELATED பணியில் இருந்த போது இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு உதவித்தொகை