கொரோனா நிவாரணம் தொடரும் கேரளாவில் டிசம்பர் வரை இலவச உணவுப்பொருட்கள்:முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இலவச மளிகை கிட் விநியோகம் தொடரும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் 88 லட்சத்து 42 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை கிட் விநியோகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் டிசம்பர் வரை இந்த திட்டம் தொடரும் என்றார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்றுநோய் மாநிலத்தில் உள்ள அனைவரையும் மோசமாக பாதித்துள்ளது. இதனால் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கொரோனா பரவத்தொடங்கி லாக்-டவுன் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்டங்களிலும், ஓணம் பண்டிகை காலத்திலும் இதேபோன்ற அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசியும் விநியோகிக்கப்படுகிறது.

இலவச உணவு கிட் திட்டம் மூலம் குறைந்தது 88 லட்சத்து 42 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் என்றார். ஐநா விருது தொற்றா நோய்களை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான இந்த ஆண்டு ஐ.நா ஊடாடும் பணிக்குழு (UNIATF) விருதை, உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்தார். இதில் தொற்று நோய்கள் அல்லாத நோய்கள் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ‘சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக’ ஐ.நா விருது கேரளாவுக்கு கிடைத்துள்ளது. இதுபோல நைஜீரியா, செயின்ட் ஹெலினா, மெக்ஸிகோ, ஆர்மீனியா, ரஷ்யா மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளின் சுகாதாரத்துறைகளும் இந்த விருதை பெறுகின்றன.

Related Stories:

>