போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்

மும்பை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், மும்பை போதை பொருள் போலீசில் ஆஜரானார். இதே வழக்கில் நாளை தீபிகா படுகோன் ஆஜராக உள்ளதால் அவர் நேற்றிரவு மும்பை வந்து சேர்ந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விசாரணை வழக்கின் முக்கிய திருப்பமாக, அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி, ரியாவின் சகோதரர் உள்ளிட்டோர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வழக்கில் மேலும் பல நடிகைகள் சிக்கியுள்ளனர். ேபாதை பொருள் போலீசார் முன் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். இதற்காக ஐதராபாத்தில் தெலுங்குப்பட படப்பிடிப்பில் இருந்த ரகுல், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பை வந்தார்.

ரகுல் ப்ரீத் சிங் பெயரை ரியா தனது விசாரணையில் தெரிவித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து தீபிகா படுகோன், சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோரும் அடுத்தடுத்த நாட்களில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். இந்நிலையில், மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜரான ரகுல் ப்ரீத் சிங், ஆரம்பத்தில் சம்மன் எதுவும் பெறவில்லை என்று கூறினார். பின்னர் அவர் போதை பொருள் போலீசாரின் சம்மனை ஏற்றுக்கொண்டு இன்று ஆஜராகி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நடிகை தீபிகா படுகோன் நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது. சினிமா படப்பிடிப்பிற்காக கோவா சென்ற நடிகை தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங்குடன், நேற்று இரவு மும்பைக்கு வந்தார். அதனால், நாளை தீபிகா படுகோன் விசாரணைக்கு ஆஜராவது உறுதியாகி உள்ளது.

Related Stories:

>