×

கரூர் மார்க்கெட் நுழை வாயிலில் பயன்பாடின்றி கிடக்கும் கைகழுவும் இயந்திரம்

கரூர் : கரூர் மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள கை கழுவும் இயந்திரம் செயல்படாமல் உள்ளது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நகராட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கை கழுவும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதே போல், கரூர் மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியிலும் நகராட்சி சார்பில் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. கால்கள் மூலம் இயக்கப்படும் வகையில் இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இயந்திரம் தற்போது செயல்பாடின்றி உள்ளது. எனவே மார்க்கெட் வளாக பகுதிக்குள் வரும் மக்கள் இதனை பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு சீரமைத்து மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : entrance , Karur: A hand washing machine installed on behalf of the municipality at the entrance gate of Karur Market is being monitored.
× RELATED தலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி