×

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அக்டோபர் 1 முதல் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு

நெல்லை : அரசு பஸ்களில் தொடர்ந்து பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அக்டோபர் முதல் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகத்தில் கொரோ னா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை 7வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 7வது கட்ட ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதையொட்டி செப்.1ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

இதைத்தொடர்ந்து செப். 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பஸ்களை இயக்கவும், நீண்ட தூரங்களுக்கு அரசு விரைவு பஸ்களை இயக்கவும் அனுமதி அளித்தது. இதன்படி 50 சதவீத அரசு பஸ்களில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும். பயணிகள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

பஸ்சில் ஏறும் பயணிகளுக்கு கைகளில் கிருமிநாசினி ெதளிக்க வேண்டும். காலை மற்றும் மாலையில் பஸ்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற அரசு அறிவுறுத்தியது.   இதன்படி நெல்லை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களில் இருந்து 50 சதவீத பஸ்கள் மட்டும் தற்போது இயக்கப்படுகின்றன. இதில் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அதிகரித்து சமூக இடைவெளி இல்லாத நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும் பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால் பயணிகள் நெருக்கடி சூழலில் பயணிப்பதாகவும், பயணிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிலை தொடர்வதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். தற்போது பொது போக்குவரத்து துவங்கியதாலும், கோயில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசிக்க அனுமதிப்பதாலும் பொதுமக்கள் அரசு பஸ்களில் பயணிப்பதை காணமுடிகிறது.
இதைத்தொடர்ந்து பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும் தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் அக்.1ம் தேதி முதல் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சான்று பெற நடவடிக்கை

கொரோனா காலகட்டத்தில் கடந்த 5 மாதங்களாக இயங்காமல் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் சாலை வரி கட்டாத பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்று பஸ்களின் இயக்க நிலை குறித்து சான்று பெறவும், சாலைவரி செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Tags : passengers , NELLY: The State Transport Corporation (STC) has decided to run additional buses from October onwards as the number of passengers on government buses continues to increase
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!