×

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது : ஐ.ஐ.த., - பா.ஜ.க., கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்க முயற்சி!!!

டெல்லி:  பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நண்பகல் 12:30 மணிக்கு பீகார் தேர்தல் எப்போது? என்பது தெரியவரும். மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அரசியல் சாசனப்படி வரும் நவம்பர் 29ம் தேதிக்குள் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆகவே அக்டோபர் மாத மத்தியில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில் பொதுமக்களிடையே கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையாக உள்ளது.

இந்நிலையில் பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி ஆவாம் மோச்சா உள்ளிட்ட அணிகளின் தொகுதி பங்கீட்டில் மோதல் ஏற்பட்டிருப்பது நிதீஷ்குமாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பீகார் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை டெல்லியில் இன்று மதியம் 12.30க்கு தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்கிறார். அதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP , Bihar, Legislature, Election, Date, IIT, BJP, Coalition, Government
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...