×

குஜராத்தில், தமிழ் பள்ளி மூடப்பட்டது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆராய்ந்து முடிவெடுப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி, :பள்ளிகள் திறப்பு குறித்து அனைத்து துறையினருடன் ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 54 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து இருபதாயிரம் மதிப்பிலான கடனுதவியை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் சேர்க்கை தேதி நீடிப்பு குறித்து அனைத்து துறையினருடன் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். அக்டோபர் 1ம் தேதி முதல் 10, 11, 12ம் வகுப்பு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பள்ளிகள் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறையினருடன் இதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பு அறிவிப்பார். 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை ஆராய்ந்து கூற வேண்டும். குஜராத்தில், தமிழ் பள்ளி மூடப்பட்டது குறித்து முதலமைச்சர் ஆராய்ந்து முடிவெடுப்பார். அடுத்த மாதம் முதல் 14474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மாணவர்கள் சந்தேகங்களை கேட்கலாம்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Tags : Palanisamy ,Gujarat ,Senkottayan ,closure ,interview ,schools ,Tamil , Gujarat, Tamil School, Chief Minister Palanisamy, Minister Senkottayan
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்