×

நாடு தழுவிய வேலை நிறுத்தம், தண்டவாளத்தில் அமர்ந்து விடிய விடிய மறியல் : வேளாண் மசோதாக்களை கண்டித்து கொதித்தெழுந்துள்ள விவசாயிகள்!!

சண்டிகர் : மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வட மாநிலங்களில் கொதித்தெழுந்துள்ள விவசாயிகள் 2வது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபி மாநிலம் அமிர்தசரஸ் நகரில் 2வது நாளாக விவசாயிகளுக்கு குடும்பத்துடன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அண்மையில், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் மசோதாக்கள் சட்டம் ஆனால் தங்களது எதிர்க்காலமே கேள்விக்குறி ஆகிவிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.ஆகவே 3 மசோதாக்களையும் மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டம் நீடிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலங்களின் வழியே செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   

இந்த சூழ்நிலையில் வேளாண் மசோதாகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது இன்று நாடு தழுவிய அளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர்.விவசாயிகளின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு பாரதி கிசான் சங்கம் உள்பட மொத்தம் 31 விவசாய குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம், ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி உள்பட மொத்தம் 19 கட்சிகள் விவசாயிகளின் இன்று மேற்கொள்ளும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.

Tags : strike ,Vidya Vidya ,Boiling farmers , Strike, Rail, Stir, Agriculture Bill, Farmers
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து