×

இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசாருக்கு கொரோனா

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 35 போலீசார் பணியாற்றுகின்றனர். இதில், 4 போலீசாருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன், லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அவர்களுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் உள்ள மற்ற போலீசாரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசாருக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதில், 4 போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசாருக்கு லேசான அறிகுறி இருந்ததால், வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள், கடந்த 1ம் தேதி முதல் பெரியபாளையம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு பணியில், பஜார் பகுதியில் ஈடுபட்டு வந்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags : Corona ,policemen ,Inspector , Corona to 8 policemen including Inspector
× RELATED கொரோனாவில் மீண்ட இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு மீண்டும் தொற்று