×

எலுமிச்சை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

போடி: எலுமிச்சை விலை உயர்ந்துள்ளதால், அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ேதனி மாவட்டம், போடி அருகிலுள்ள குரங்கணி, பிச்சங்கரை, அடகுமுறை, பெரியாற்று கோம்பை, மல்லிப்பட்டி, முத்துக்கோம்பை, முந்தல் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எலுமிச்சை சாகுபடி நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சைக்கு தனி சுவையுண்டு. இதனால் இப்பகுதியில் விளையும் எலுமிச்சைக்கு மார்க்கெட்களில் தனி கிராக்கி உண்டு. மாவட்ட அளவில் போடியில் மட்டும் எலுமிச்சை விற்பனைக்கு தனி மார்க்கெட் உள்ளது.

இந்த மார்க்கெட்டிலிருந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்தில் தொடுபுழா, சங்கனாச்சேரி, கோட்டயம், பெரும்பாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் எலுமிச்சை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளதால், மார்க்கெட்டிற்கு வரத்து சரிந்துள்ளது. இதன் காரணமாக எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. தற்போது 1 கிலோ எலுமிச்சை ரூ.60க்கு விற்பனையாகிறது. இதனால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Lemon price hike: Farmers happy
× RELATED ஏப்ரல்-19: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை