×

ஹரியானாவில் நிகழ்ந்த சம்பவம்: சரக்கு ரயிலில் சிக்கி சிறுகாயமின்றி தப்பிய சிறுவன்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்.!!!

ஆக்ரா: சரக்கு ரயிலில் சிக்கிய சிறுவன் சிறுகாயமின்றி தப்பிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் மாவட்டம் பல்லப்கர் ரயில் நிலையம் அருகில் 2 வயது சிறுவன் தனது 14 வயது சகோதரனுடன் விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்த சிறுவனின் சகோதரன் வெளியே சென்று விட்டான். இந்நிலையில், சிறுவன் மீது சரக்கு ரயில் ஏறியது.

அந்த நேரத்தில் பைலட் திவான் சிங் மற்றும் அவரது உதவியாளர் அதுல் ஆனந்த் ஆகியோர் குழந்தையின் மீது சரக்கு ரயில் ஓடிக்கொண்டிப்பதை கவனித்தார்கள். அவர்கள் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்த விரைந்தனர். ஆனால் ரயில் சிறுவனைக் கடந்து சென்ற பின்னரே நின்றது. அச்சத்துடன் திவான் மற்றும் அதுல் ரயிலிலிருந்து வெளியே குதித்து சந்தேகத்துடன் அந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று பார்த்தனர். ஆனால் அதிசயமாக அந்த குழந்தைக்கு காயமடையவில்லை. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags : Incident ,Haryana , The boy who escaped unhurt after being trapped in a freight train: Video goes viral on social media !!!
× RELATED விகேபுரம், பாபநாசத்தில் வெவ்வேறு சம்பவத்தில் 2 முதியவர்கள் சாவு