×

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆக. 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பி.க்கு எக்மோ, இதர கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி. உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பி.க்கு அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : SB Balasubramaniam , Singer SB Balasubramaniam's health is very worrying: Hospital report
× RELATED மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்...