×

அக்டோபர் முதல் மின்சார ரயில் இயக்கபடுமா?... செப்.,29-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!!!

சென்னை:  செப்டம்பர் 30ம் தேதியுடன் 8ம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், செப்டம்பர் 29ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் படையெடுக்க தொடங்கியது. இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமே இருந்தது. அதிலும் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது கொரோனா வைரஸ். இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர், பலகட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு, அவற்றில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து, தற்போது செப்டம்பர் இறுதி வரை 8ம் கட்ட ஊரடங்கானது அமலில் உள்ளது. இருப்பினும் இவற்றில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து செப்டம்பர் 30ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க மருத்துவ நிபுணர்களுடன் வருகிற 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை செய்துகொண்டிக்கும் சூழலில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவ்வாறு இருக்கிறது?,

மேலும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஏனென்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்திலும் சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையானது அதிகரித்த வண்ணமே இருந்து. இதனால் தற்போது அதிகளவு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இறப்பு விதமானது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே செப்டம்பர் மாதம் இறுதி வரை 8ம் கட்ட ஊரடங்கானது பல்வேறு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்?,

மேலும் தளர்வுகள் கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இதனையடுத்து மாவட்டந்தோறும் கொரோனாவின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனைகள் முடிந்த பின்னரே 9ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அல்லது நிறுத்தப்படுமா? என தெரியவரும்.

Tags : Palanisamy ,experts , As the 8th phase of the curfew comes to an end, the Chief Minister will consult with the medical experts on September 29! ... Will the curfew be extended? Stop?
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...