×

சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: காவல்துறை, வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?..நீதிபதிகள் சரமாரி கேள்வி.!!!

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் குவாரி இயங்கி வருகிறது. இதனால், விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது எனவே சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து தடுத்து நிறத்த வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக, கல்லிடைக்குறிச்சி பகுதியில் எம் சாண்ட் தயாரிக்க அனுமதி வாங்கிய சட்டவிரோதமாக மணல் குவாரி நடைபெறுவதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், இந்த மனுக்கள் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள், சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி காட்சி மூலம் ஆஜரான நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மணல் குவாரி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தாக்கல் செய்தனர். அறிக்கையால் திருப்தியடையாத நீதிபதிகள், தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

 நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி-யும் திணறினர். பல கோடி ரூபாய் அபாரதம் விதிக்கும் அளவுக்கு மணல் கொள்ளை நடக்கும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது. ஏன்? மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தவில்லை.  மணல் கடத்தல் தொடர்பாக விஏஓ-க்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  டன் கணக்கில் மணல் கடத்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு விஏஓ-க்கள் மட்டும்தானா? உடந்தையாக இருந்தார்களா? மணல் கடத்தல் தொடர்பாக விஏஓ மீது மட்டும் நடவடிக்கை எடுத்ததற்கான காரணம் என்ன?. ஏன்? மாவட்ட அளவிலான காவல்துறை, கணிமவளத்துறை, வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? இவர்கள் மீது என்ன? நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் காவல்துறை, கணிமவளத்துறை, வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், மணல் கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன்? அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.


Tags : revenue officials ,Judges , Illegal sand demand case: Why the police do not take action against revenue officers? .. Judges barrage question. !!!
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...