×

'உடற்பயிற்சியை ஒருபோதும் விட மாட்டேன்':ஃபிட் இந்தியா இயக்க விழாவில் பிரதமர் மோடியுடன் விராட் கோலி கலந்துரையாடல்

டெல்லி : ஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள உடல் நல ஊக்கம் அளிப்பவர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த சந்திப்பில், உடல்நலம் மற்றும் நல்ல ஆரோக்கியம் குறித்த பிரதமரின் சிந்தனைகளுக்கு செவிமடுப்பதோடு, உடலை உறுதிப்படுத்துவதில் தங்களின் சொந்த அனுபவங்களையும் பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொடனர். இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி, மிலிந்த் சோமன், ருஜூதா திவேகர் மற்றும் இதர உடல்நல ஊக்கம் அளிப்பவர்கள் பங்கேற்றுள்ளனர்.

துபாயில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடியுடன் பேசிய விராட் கோலி, உடற்பயிற்சியை ஒருபோதும் விட மாட்டேன். தொடர் உடற்பயிற்சின் மூலமாக வலிமையான உடலை தக்கவமைத்துக் கொள்ள முடியும், என்றார். இதைத் தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடி அவர்களுக்கு எடுத்துரைத்தார். கோவிட் 19 காலகட்டத்தின் போது, உடல் நலத்தைப் பேணுவது வாழ்க்கையின் முக்கியமான அங்கமாகி விட்டது. ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்தின் இதர அம்சங்கள் குறித்து சரியான நேரத்தில் சிறந்ததொரு விவாதம் இந்த உரையாடலில் உருவானது குறிப்பிடத்தக்கது.


Tags : Modi ,Virat Kohli ,launch event ,Fit India , Exercise,: Fit India, Festival, Prime Minister Modi, Virat Kohli, Discussion
× RELATED கோவளத்தில் உடற்பயிற்சிக்காக...