×

Sputnik-V என்ற இரண்டாவது கொரோனா தடுப்பூசியை ரஷ்யா விரைவில் பதிவு செய்யும்: ரஷ்ய அதிபர் புடின் தகவல்

மாஸ்கோ: கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். ‛Sputnik-V என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை கடந்த ஆகஸ்டு மாதம் பதிவு செய்து தற்போது உற்பத்தியை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்திருந்தது. மற்ற நாடுகள் தடுப்பூசி கண்டறிவதில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தனது இரண்டாவது தடுப்பூசியையும் கண்டறிந்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

Vector மையத்தின் கொரோனா தடுப்பூசியான ‛Epivacorona ரஷ்யாவின் இரண்டாவது தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி பதிவை அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்கப்போவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் கூறியது. ரஷ்யாவின் சுகாதார அமைப்பு இப்போது கொரோனாவை திறம்பட எதிர்கொள்ள தயாராக உள்ளது என ரஷ்ய உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் புடின் கூறினார். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மனித உயிர்களின் மதிப்பினை உணர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையும், கொரோனா முன்கள பணியாளர்களும் தங்களின் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்போது நம் நாடு கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் உள்ளது என தெரிவித்தார்.

Tags : Russia ,Vladimir Putin ,Russian , Sputnik-V, corona vaccine, Russia, Putin
× RELATED மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள்...