×

போலீஸ் ஸ்டேஷனில் கள்ளக்காதல் ஜோடி தஞ்சம்: உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

சூலூர்: சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் கள்ளக்காதல் ஜோடி தஞ்சமடைந்தது. உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை செட்டிபாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிக்குமார் மகன் ஆனந்த்குமார் (24). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகனப்பிரியா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோகனப்பிரியாவுக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தை உள்ளது. ஆனந்தகுமார் மற்றும் மோகனப்பிரியா இடைேயயான பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் கள்ளக்காதல் ஜோடி காணாமல் போயினர். இது தொடர்பாக மோகனப்பிரியாவின் குடும்பத்தினர் செட்டிபாளையம் போலீசில் மோகனப்பிரியாவைக் காணவில்லை என புகார் அளித்தனர். இந்நிலையில் காணாமல்போன கள்ளக்காதல் ஜோடி நேற்று மதியம் சூலூர் போலீஸ் ஸ்டேஷனில்  தஞ்சமடைந்தனர்.

இத்தகவல் அறிந்ததும் மோகனப்பிரியா மற்றும் ஆனந்தகுமார் குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்தனர். இரு வீட்டாரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. உறவினர்கள் போலீசாருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து சூலூர் போலீசார் பலத்த பாதுகாப்புடன் இரண்டு கார்களில் மோகனப்பிரியா மற்றும் ஆனந்தக்குமாரை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துச் சென்றனர். கள்ளக்காதல் ஜோடி தஞ்சம் அடைந்ததால் ஏற்பட்ட கூட்டம் காரணமாக சூலூர் போலீஸ் ஸ்டேஷனில்  திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : shelter ,police station ,relatives , Sulur, false love, couple
× RELATED டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போலீஸ் நிலையம் முற்றுகை