×

பர்லியார் சோதனைச்சாவடியில் கலெக்டர் ஆய்வு

ஊட்டி: குன்னூர் அருகேயுள்ள பர்லியார் சோதனைச்சாவடியில் கலெக்டர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் இம்மாத துவக்கம் முதல் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் நீலகிரி மாவட்டம் போன்ற சுற்றுலாத்தளங்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் என தெரிவிக்கப்பட்டது. அவசர தேவைகளுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

சமவெளி பகுதிகளில் உள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரசு பஸ்கள் மூலம் வர ஆதார் உள்ளிட்ட ஏதேனும் உள்ளூர் முகவரி உள்ள ஆவணங்களை காண்பித்து வரலாம் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 9ம் தேதி முதல் நீலகிரியில் உள்ள பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்ட நிலையில், வெளியூர் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் முறையில் டூரிசம் என்ற பிரிவை பயன்படுத்தி இ-பாஸ் பெற்று வந்து பூங்காக்களை பார்வையிடலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கை சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சமவெளி பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் இ-பாஸ் வைத்திருக்கிறார்களா? என குன்னூர்-ேமட்டுபாளையம் சாலையில் பர்லியார் சோதனைச்சாவடியில் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் இன்றி வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இதனிடையே மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பர்லியார் சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். இவ்வழியாக வர கூடிய மக்களிடம் இ-பாஸ் உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் அறிவுரைகள் வழங்க வேண்டும் என அங்குள்ள அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் உட்பட பலர் உடனடிருந்தனர்.

Tags : Collector inspection ,Burliar ,checkpoint , Burlier Checkpoint, Collector, Inspection
× RELATED கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு