×

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு: ஈரோட்டில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். ஈரோடு மாநகரில் முக்கிய பகுதியான மணிக்கூண்டு, திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி., ரோடு, நேதாஜி ரோடு போன்ற பகுதிகளில் ஏராளமான ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள சாலையை ஆக்கிரமித்து விளம்பர தட்டிகள், கழிவு நீர் சாக்கடை செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து பொருட்களை வைத்தும், சிலாப் கற்களை வைத்தும் பயன்படுத்தி வந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

இந்நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து கடந்த சில வாரங்களாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த விளம்பர தட்டிகள், மரப்பெட்டிகள் அகற்றியும், கழிவுநீர் சாக்கடை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மேலும் அதிகாரிகளை பார்த்ததும் சில கடைக்காரர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அவசர அவசரமாக அகற்றி பொருட்களை பாதுகாப்பாக எடுத்து சென்றனர். இதேபோல், மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அடுத்தடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Removal ,corporation officials , Occupancies, Removal
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...