×

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே கர்நாடக மாநில பக்தர்களுக்காக ரூ. 200 கோடி மதிப்பில் ஓய்வறை முதல்வர்கள் ஜெகன், எடியூரப்பா அடிக்கல் நாட்டினர்!!

திருமலை, :திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே கர்நாடக மாநில பக்தர்களுக்காக ரூ.200 கோடியில் ஓய்வறை கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயில் பின்பகுதியில் உள்ள கர்நாடக சத்திரம் பகுதியில் கர்நாடக மாநில அரசின் சார்பில் அம்மாநில பக்தர்களுக்காக ₹200 கோடி மதிப்பில் பக்தர்கள் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்றிரவு திருமலைக்கு வந்தார்.

இன்று காலை கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆகியோர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நாத நீராஞ்சன மண்டபத்தில் உலக நன்மைக்காக நடைபெற்று வரும் சுந்தரகாண்ட பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து இருமாநில முதல்வர்களும், கர்நாடக சத்திரம் பகுதியில் பக்தர்கள் ஓய்வறை கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இதில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் இரு மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.இதையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் காலை 9.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து தடேப்பள்ளி புறப்பட்டு சென்றார். அதேபோல் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

Tags : restroom chiefs ,Tirupati Ezhumalayan Temple ,Edyurappa , Rajiv Gandhi, murder, trial, life sentence, Perarivalan, 30 days, High Court...
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 24ம்...