×

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பாதிப்பு: திருச்சி ஜிஹெச்சில் தீவிர சிகிச்சை

திருச்சி: கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை 9,746 பாதிக்கப்பட்டுள்ளனர். 100 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க முககவசம் அணிய வேண்டும். தேவையின்றி மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பீதியில் மக்கள் உள்ள நிலையில், திருச்சியில் தற்போது டெங்கு காய்ச்சலும் பரவ தொடங்கி உள்ளது. காந்திமார்க்கெட் நெல்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பரசுராமன், மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் ரேவதி, மாநகராட்சி உதவி கமிஷனர் கமலகண்ணன் மற்றும் அலுவலர்கள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், கொசு ஓழிப்பு பணியாளர்கள் நெல்பேட்டை பகுதிக்கு சென்று டெங்கு தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். வீடு வீடாக கொசுமருந்து அடிக்கப்பட்டு வருகிறது. தெருக்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டது.

ரூ.5 ஆயிரம் அபராதம்

காந்திமார்க்கெட் நெல்பேட்டை பகுதியில் வீடுகள், கடைகளில் கொசு உற்பத்தி காரணிகளை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தானர். அப்போது ஒரு கடையின் மாடியில் கொசுபுழு உருவாகும் வகையில் டயர்களை அடுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

Tags : Corona, Dengue Fever, Trichy
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...