×

கொரோனா நோய் பாதித்த விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது : மியாட் மருத்துவமனை விளக்கம்

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அவர்களுக்கு கோவிட் 19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 22 அன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தேமுதிக தலைமைக்கழகம் சார்பில் அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியது.அதில், விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

Tags : Vijaykanth , Corona, Vijayakant, Health, Miad Hospital, Description
× RELATED விஜய் சேதுபதி, தோனி மகள்களுக்கு பாலியல் மிரட்டல்.: விஜயகாந்த் கண்டனம்