×

சென்னை திருமுடிவாக்கம் சிப்காட் வளாகத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து!: ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரை..!!

சென்னை: சென்னை திருமுடிவாக்கம் சிப்காட் வளாகத்தில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமாக குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் சிப்காட்டில் பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. திருமுடிவாக்கம் சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் உள்ளிட்ட பகுதியில் கழிவாக வெளியேறும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை அரைத்து மறுசுயற்சி செய்ய இக்குடோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்த்தி முருகன் என்ற பிளாஸ்டிக் குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக குடோன் காவலாளி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  2 வாகனங்களில் விரைந்த தாம்பரம், பூவிருந்தமல்லி தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரமாக தீயினை கட்டுப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் தீயை கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. இத்தீவிபத்து காரணமாக வானுயர கரும்புகை சூழ்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிபத்து ஏற்பட்ட உடனேயே காவலாளி வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்து குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் சதி திட்டமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Tags : fire ,premises ,Chennai ,Thirumudivakkam Chipkot , Chennai, Thirumudivakkam, Chipkot, Plastic Cotton, Fire Accident
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா