×

133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி,ஆர்,பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்றனர். நடந்து முடிந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றது. திமுக எம்எல்ஏ கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து ஆட்சிமைக்க உரிமை கோரினார்.  திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது இதில் திமுக  சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் மற்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சியின் எம்எல்ஏ-க்களும் கலந்துகொண்டனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து சட்டமன்றத் தலைவராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிய, திமுக முன்மைச்செயலாளர் கே.என்,நேரு வழிமொழிந்தார். திமுக சட்டமன்றக் கட்சி தலைவராக முக.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 133 எம்எல்ஏ-க்கள் ஆதரவு கிடைத்த ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். அப்போது புதிய அமைச்சரவையில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலையும் ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் முதல்வராக ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் நிகழ்வில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்….

The post 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Governor ,Panwarilal ,Prohithi ,G.K. ,Stalin ,Chennai ,Bhanwarilal Prohithi ,BSE. ,G.K. Stalin ,B.C. ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...