×

கீழடி அகழாய்வில் தோண்ட தோண்ட கிடைக்கும் சான்றுகள்!: ஆமை வடிவ அச்சு, வட்டச்சில்லு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு..!!

சிவகங்கை: கீழடி அகழாய்வில் ஆமை வடிவ அச்சு, பெண்கள் விளையாடும் வட்டச்சில்லு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில், ரூ. 40 லட்சம் செலவில் 6ம் கட்ட அகழாய்வு  பணி கடந்த பிப்ரவரி 19ம் தேதி துவங்கியது. கீழடியில் 18 குழிகளும், கொந்தகையில் 7 குழிகளும், மணலூரில் 5 குழிகளும், அகரத்தில் 12 குழிகளும் தோண்டப்பட்டு பணிகள்  நடந்து வருகின்றன. இதில் எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள், உறைகிணறு, உலைகலன், செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் கீழடி 6ம் கட்ட அகழாய்வில் ஆமை வடிவ அச்சு, பெண்கள் விளையாடும் வட்டச்சில்லு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுக்கள் உள்ளங்கைக்குள் அடங்கும் வகையில் சிறிய கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இதன் மேற்புறம் மூன்று சிறிய ஓடுகளும் ஆமையின் உருவத்தை ஒத்த வகையில்  உள்ளன. தற்போதைய சுங்கச்சாவடியை போன்று ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது வெளியூர் நபர்களை கண்டறிய இந்த அச்சுக்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கீழடி அகழாய்வில் பெண் முகம் கொண்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. பெண் முகம் கொண்ட அச்சில் அவர்கள் காதணிகள் அணிந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே பெண்கள் விளையாடிய வட்டச்சில்லும் கிடைத்துள்ளன. ஏராளமான பானையின் கழுத்துப் பகுதி கிடைத்துள்ள நிலையில், அவைகளின் எடை அதிகமாக இருந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.


Tags : Bottom excavation, turtle-shaped axis, circular chip, discovery
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையில் 4 டன்...