×

10ம் வகுப்பு தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் கல்லூரி மாணவர் கைது

விழுப்புரம். : புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (19) பி.இ. படித்து வருகிறார். இவரது நண்பர் கார்த்திக்  (34). கார்த்திக் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற அவருக்கு பதிலாக கிஷோர் தனித்தேர்வு எழுத திட்டமிட்டார். அதன்படி விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில தேர்வும், தமிழ் தேர்வும் எழுதி உள்ளார். நேற்று கணித தேர்வு எழுதினார். அப்போது திடீரென பறக்கும் படையினர் சோதனைக்கு வந்தனர். கிஷோர் கணித தேர்வில் தமிழில் எழுதுவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் எழுதி உள்ளார். பறக்கும்படை அதிகாரிகள் விசாரணையில் கிஷோர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.Tags : College student ,student , College student arrested for impersonating 10th class student
× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை