எல்லையில் 3 இடங்களில் பாக். ராணுவம் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், இருதரப்பு சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காலை 9 மணியளவில் பூஞ்ச் மாவட்ட எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் 3 இடங்களில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். சிறிய ரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. கெர்னி, கஸ்பா, ஷாபூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த மாதத்தில் மட்டும் இதுவரையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

Related Stories:

>