புதிதாக தேர்வான 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக கேடரில் புதியதாக தேர்வான 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆல்பர்ட் ஜான் வேலூர் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், சமே சிங் மீனா திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், ஆதர்ஷ் பச்சேரா செங்கல்பட்டு உதவி காவல் கண்காணிப்பாளராகவும், புக்யா சினேகா பிரியா கடலூர் மாவட்டம் நெய்வேலி உதவி காவல் கண்காணிப்பாளராகவும், தீபக் சிவாச் ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், ஹர்ஷ் சிங் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், கிரண் ஸ்ருதி திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>